எங்க போனாலும் ஹெல்மட் ஹெல்மட் ஹெல்மட்.....மிடியல!

டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு அமெரிக்கா ஏகாதிபத்தியத்தையும், இந்தியா பொருளாதாரத்தையும் பேசிக் கொண்டிருந்த பெரிய பெரிய மகான்கள் கூட இப்பொழுது ஹெல்மெட்டை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க. 

இது போதாதுன்னு வாட்ஸ் அப்- ல இவங்க பண்ற அலம்பல் அய்யய்யய்யோ…. 



"15,000 ரூபாய் லேப்டாப்ப இலவசமா கொடுக்கற கவர்மெண்ட், ஹெல்மெட்டை இலவசமா கொடுக்காதா" ன்னு மெஸேஜ் பண்ணியே சாவடிக்கிறானுக! கவர்மெண்ட் ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவேன்னு வருங்காலத்துல சொன்னாலும் சொல்லுவாங்க போல?!

எந்த ஒரு சட்டம் வந்தாலும் மொதல்ல பாதிக்கப்படுறது நம்ம இளைஞர் பட்டாளம்தான். ஏற்கனவே தொப்பையை குறைக்கணும்னு படாதபாடு படுறாங்க!, இதுல சொட்ட வேறயா? கூடிய சீக்கிரம் அமேசான் காடுகளில் விளையக்கூடிய மூலிகை எல்லாத்தையும் நம்ம பயகதான் காலி பண்ணுவாங்க போல.

இந்த ஹெல்மெட் கட்டாயத்துல ரொம்பவே பாதிக்கப்படுறது மெடிக்கல் ரெப்ரசன்டேடிவ்களும், மார்க்கெட்டிங் பீல்டுல ஒர்க் பண்றவங்களும்தான். ஏற்கனவே பார்க்கிங்க்கு இடம் கிடைக்காம, வெயில்ல வெந்தும் வேகாத ஆப்பாயில் மாதிரி கடுகடுத்து, தெருவுக்கு தெரு, கடைக்கு கடை கையில பேக்கு, பைல்லுன்னு ஏறி இறங்குவாங்க. இப்ப இதுல புள்ளதாச்சி மாதிரி ஹெல்மெட்டும் சேர்ந்து போச்சு!
இந்த சட்டத்துலயும் பொண்ணுங்க கிரேட் எஸ்கேப்! ஹெல்மேட் கையில எடுத்துட்டு போறது சிரமமான விஷயம் கிடையாது, வழக்கம்போல எங்க போனாலும் அவிங்களோட ஸ்கூட்டி டிக்கியில ஹெல்மெட்ட வெச்சிட்டு போயிருவாங்க, 18 முதல் 36 வயதினிலே உள்ள ராசாத்திக்கள் பெட்ரோல் அடிக்கறப்ப ஒரு அலம்பல் பண்ணுவாங்க பாருங்க,....

வண்டிய நிறுத்தி சைடு ஸ்டேன்டு போட்டு, பெரிய பேக் எடுத்து, அதுல ஒரு பர்ஸ எடுத்து, அதுக்குள்ள ஒரு குட்டி பர்ஸ எடுத்து காசு கொடுத்து, சில்லறையை வாங்கி, மறுபடியும் அத பேக்ல வெச்சிட்டு, சைடு ஸ்டேண்டு எடுத்து ஜங்குன்னு உட்கார்ந்து, வண்டிய ஸ்டார்ட் பண்ணி நமக்கு வழி விடுறதுக்குள்ள உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…… இதுல இப்ப ஹெல்மெட்ட வெச்சி வேற வெறியேத்துவாங்க! நமக்கு சோடா குடிக்கறப்ப கூட நம்ம மூஞ்சி அப்படி இருக்காது பாஸ்!

இந்த சட்டத்துல பெரிய கடுப்பு என்னன்னா? பின்னாடி இருக்கறவிங்களும் ஹெல்மெட் போடணும், சும்மாவே லிப்ட் தரமாட்டாங்க. இனி நடந்து போறவிங்களும் ஒரு ஹெல்மெட்ட கையில வெச்சுக்கணும் போல ஹும்.. வீட்டுக்கு தெரியாம டாவடிக்கிற எல்லாருக்கும் உண்மை யிலேயே இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதம்! 

ஏற்கனவே முட்டுச் சந்துகளிலும், ஸ்பீடு பிரேக்குகளிலும் அயராமல் உழைக்கும் நம் காவல்துறைக்கு, 5 -ம் தேதி ஆரம்பிக்க வேண்டிய குருப்பெயர்ச்சி பலன்கள் 1-ம் தேதியே ஆரம்பிக்குது, சம்பள பணம் இனி அக்கௌண்ட்டில் அப்படியே இருக்கும். ஏன்னா காது கிழிய கத்தினாலும் எப்படியும்  நூத்துக்கு பத்து பேரு ஹெல்மெட் போடாமத்தான் வரப்போறாய்ங்க.
நம்மாளுக டிசைன் அப்படி!

டிஸ்கி


  • இந்த பதிவு விகடன் இணையத்தில் 30/06/2015 வெளியானது. நண்பர்களுக்காக இங்கே அந்த பதிவு. அதன் சுட்டி http://www.vikatan.com/news/article.php?aid=48752

No comments:

Post a Comment