ட்விட்டருக்கு நன்றி

சொந்த உறவுகளின் ஏமாற்றம், நண்பர்களின் ஏமாற்றம், சகோதரர்களின் ஏமாற்றம், தோழிகளின் ஏமாற்றம் என்று

 "என் வாழ்கையில் பணம் என் உறவுகள் யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருந்தது" 






எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் சிரித்துக்கொண்டே சமாளித்துவிடுவேன்.

ஆனால் அந்த சூழ்நிலையில் என்னால் இயலவில்லை காரணம் என் நெருங்கிய தோழிக்கு அந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது இது போக வருடம் ஒருமுறை மட்டும் வரும் திவீர டைபாயிடு காய்ச்சல்ஒரு வேளை கூட சாப்பிட முடியாத நிலை என் இவ்வளவு இக்கட்டான பிரச்சினையில் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன் முதல் மாத சம்பளம் இரண்டாவது மாதத்தில் தான் வரும் அந்த இரண்டு மாதத்தில் தான் இவ்வளவு பிரச்சினை.

நான் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பவன் எதற்கும் கவலை படமாட்டேன் ஆனால் அப்பொழுது வாழ்க்கைக்கு எதிர்மறை எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருந்தேன் அத தூக்கி எரிந்து மட்டுமில்லாமல் எட்டி உதைத்து இப்படியும் உள்ளது என் அழகாக காட்டியது "ட்விட்டர்"

அப்பொழுது எனக்கு 50க்கும் குறைவான பாலோவர்கள் தான்.

ட்வீட்டரை பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தேன் அப்போது ஆனந்த விகடனில் வந்த கீச்சுகளை பார்த்துதான் தமிழ் கீச்சர்களுக்குள் உள்ளே நுழைந்தேன். நான் முதலில் தொடர்ந்த நபர் @thoatta மாம்ஸ் தான் அவரின் பாலோவிங் லிஸ்டை பார்த்து கணிசமான சில நபர்களை தொடர்ந்து கொண்டேன்.

அந்த ட்விட்டர் உலகம் எனக்கு புதுமையாகவும் ரொம்ப பிடித்தும் இருந்தது

அப்பொழுது எல்லாம் எந்த புதிய தமிழ் கீச்சர்கள் வந்தாலும் நாம் தொடராமலேயே தொடர்பவர்கள் @Karaiyan @bharathi (Now @Bharathi_143) தொடர்ந்தால் தொடர்பவர்கள் @Parthi_fun @senthilcp @minimeens என நிறைய பேர் இருந்தார்கள் @Karaiyan ட்விட் தமில் மூலம் புதிய தமிழ் கீச்சர்களுக்கு தமிழில் எப்படி எழுதுவது ட்வீட்டரை எப்படி பயன்படுத்துவது போன்ற சந்தேகங்களை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார். ஒரு பிரச்சினையில் இவர் தானாகவே ட்வீட்டரிலிருந்து விலகி கொண்டார் இவர் விலகாமல் இருந்திருந்தால் இணையத்தில் சந்தேகம் தீர்க்கும் தளமாக (அ) ஐடியாக இன்றும் முன்னிலையில் இருந்திருப்பார் என்று அவதானிக்கிறேன்.

எனக்கு ட்வீட்டரில் முதல் நெருக்கமான நண்பர்கள் @paramesh2006 @im_sathis சிங்கையில் இருக்கிறார்கள் தினமும் இரவு மணியளவில் வேலையை முடித்து வரும் போது எப்பொழுதுமே என்னுடன் கலந்துரையடுவர்கள்.

என்னை தொடர்ந்த முதல் பிரபலம் @thirumarant மாம்ஸ்தான் விகடன் தத்தா டிபி வைத்துக்கொண்டு எந்த பிரச்சினை என்றாலும் நாட்டமையாக சொம்பு எடுத்துக்கொண்டு வந்துவிடுவார் அவர் தொடர்ந்தமைக்கு நன்றி சொன்னேன் அதற்க்கு அவர் கூறியது 
"நான் ட்வீட்டருக்கு வரும் போது பாலோவர்களுடன் தான் வந்தேன் நான் பிரபலம் இல்லை என்று கூறினார்"
அன்று முதல் நான் பாலோவர்ஸ்களை எதிர்பார்ப்பதில்லை.

எனக்கு 50பலோவேர்ஸ் கிடைத்தற்கு வாழ்த்துகள் மட்டும் 25க்கும்  மேல் இருந்தது @sweetsudha1 அக்கா வாழ்த்தியது மட்டும் இன்றும் நினைவில் ஆனால் இப்பொழுது எத்தனை பலோவேர்ஸ்கள் வந்தால் கூட முன்போல் எந்த ஒரு ஈர்ப்பும் இருப்பதில்லை:-(

"எனக்கு காய்ச்சல்" என்ற ஒரே ட்விட்தான் போட்டேன் அந்த நிமிடத்திலிருந்து எனக்கு காய்ச்சல் சரியாகும் வரை தினமும் அக்கறையாக நலம் விசர்ரித்த @மங்கை அக்காவை ஒரு போதும் மறக்க முடியாது. நான் முதன் முதலில் பார்க்க நினைத்த ட்விட்டர் நபரும் இந்த அக்கா மட்டும் தான்.

எப்பொழுதும் இல்லாமல் சில சமயம் #HashTag க்குகள் ஓடும் அதில் நான் அதிகம் ரசித்தவை #DrinkersDialogue , #CaptianBirthday & #WhenIwasAKid .

அதே சமயம் ஒரு பிரச்சினை அல்லது போராட்டம் என்று வரும் பொழுது #HashTag ன் மதிப்பு அளப்பரியது. 


நான் முதன் முதலில் பார்த்த போராட்டம் #KillingFields தான் இதற்க்கு முன் ஈழத்தை பற்றி பெரிதும் அறியாதவன் ட்விட்டருக்கு வந்த பிறகு தான் ஓரளவுக்கு அதைப்பற்றி அறிய செய்தது, அவர்கள் நமது சகோதர, சகோதரிகள் அவர்கள் உரிமைக்காக போராடுவது நமது கடமையும் என புரியவைததும் ட்விட்டர்தான். கிட்டத்தட்ட 7 நாட்கள் தொடர்ந்து வேறு எந்த கீச்சும் கீச்சாமல் அதைப்பற்றியே கீச்சி சமூக வலைத்தளங்களையே அதிர வைத்தவர்கள் நமது ட்விட்டர்கள் அது மட்டும் அல்ல சைபர் க்ரைம் பிரச்சினை Student Strike என அவசியப்படும் எந்த பிரச்சினையும் அலசி ஆராய்ந்து விடுவார்கள்.

நிறைய பேரிடம் அலைபேசியில் பேசியிருந்தாலும், நான் முதன் முதலில் நேரில் பார்த்த கீச்சர் @g4gunaa மாம்ஸ் தான்! அவர் திருமணத்திருக்கு அழைப்பிதல் கொடுக்க வந்திருந்தார் நானும் தம்பி @MahaaPrabu வும் அவரைச் சந்தித்தோம் October 17 - 2013 அவர் திருமணம் அன்று மட்டும் மூன்று ட்விட்டர்கள் திருமணம் (@g4gunaa @paramesh2006 @Tparavai ) நடைபெற்றது.

நான் 2011ம் ஆண்டு சென்னை மெகா ட்விட்டப்பை தவறவிட்டிருந்தேன் அதனால் இது 
எனக்கு முதல் ட்விட்டப் அதனால் ஏக உற்சாகம், எதிர்பார்ப்பு அனைவரையும் சந்தித்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை "யார் இவர்கள்? இத்தனை நாள் எங்கிருந்தார்கள்? இவர்கள் சொந்த ரத்தம் இல்லை ஆனால் ஏதோ சிறுவயதில் இருந்து பழகிய போன்ற ஒரு உணர்வு! அவ்வளவு சந்தோசம்.

கல்யாணத்தை முடித்துக்கொண்டு திருச்செங்கோடு ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்க சென்றோம் @Rajanleaks @iParisal @K7classic @Uyarthiru420 @Raguc @MahaaPrabu etc.. பச்சை பசேல் என்று தென்னை மரங்கள் சூழ்ந்திருந்த காவிரி ஆறும், பசிக்கு பார்சல் செய்யப்பட்ட புரோட்டாவும், அங்கேயே பிடித்து பொறிக்கப்பட்ட மீன்களும், பத்தாமல் போன "மதுவுடன்" "சொர்க்கம் மதுவிலே" என ஆட்டம் போட்டது என மறக்க முடியாதது. "ரொம்ப நாள் கழித்து அன்று சந்தோசமாக இருப்பதாய் ராஜன் மாம்ஸ் கூறினார்!.

எனக்கு ட்விட்டரில் மிகவும் பிடித்த இரண்டு ஆளுமைகள் ராஜன் மாம்ஸும், பரிசல் மாம்ஸும் தான்! பிடித்ததற்கான காரணங்கள் அதிகம்.

கட்டயாம் பார்த்தே ஆகா வேண்டும் என்று சிங்கையில் இருந்து வந்த @im_sathis சகாவும் நானும் திருச்சியில் சந்தித்து கொண்டோம் அங்கு எதிர்பாரதவிதமாக @Rocket_Rajesh @iGhilli @iKrish @RealRenu என்று பல பிரபலங்களையும் சந்திக்க நேர்ந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

கருப்பு @iKaruppiah ட்விட்டரில் எனக்கு நெருங்கிய நண்பன்!

ட்விட்டரில் ஆல்ரவுண்டர் என்றால் நான் கருப்புவைத்தான் சொல்லுவேன் சும்மா எல்லா பக்கமும் சிக்ஸர் அடிப்பான்! கவிஞன், கணக்காளன், புகைப்பட பைத்தியம், பெரிய ஆளுமைகளுடன் இலக்கியம் பேசுவான், அதே சமயம் "போக்குவரத்து விதிகள்" என்று நநிகீயும் கீச்சுவான் எந்த நேரத்தில் உதவிகள் கேட்டாலும் யோசிக்காமல் செய்வான், எனக்கு பலநேரங்களில் நிறைய உதவிகளை செய்திருக்கிறான், ட்விட்டரில் எது புரியவில்லை என்றாலும் கருப்புக்குதான் முதல் போன்கால்... அனைவருக்கும் பிடித்தவன்! எனக்கும்;-)

--------------

ட்விட்டரில் சகோதரர், சகோதரி, நண்பா, தோழி, மாம்ஸ், மச்சி, மாப்பி மட்டும் அல்ல "அம்மா" என்ற உறவும் இருக்கிறது. @amas32 அம்மா தன்னைப்பற்றி The Hindu ஆங்கில நாளிதழில் வந்த செய்தியை சுட்டியுடன் பகிருந்திருந்தார் அப்போது வாழ்த்து சொன்னதன் மூலம் அம்மா அறிமுகம் எனக்கு கிடைத்தது. நண்பர்களுடன் பீர் சாப்பிடும் போது ஒருமுறை Status Update செய்திருந்தேன் அதைப் பார்த்துவிட்டு இப்படியெல்லாம் செய்யாதே தவறு என அன்பாக கண்டித்தார். இந்த மாதிரி யாரிடமும் கேட்டது இல்லை ஆனால் உன்னிடம் கேட்க தோன்றியது என கூறினார் அந்த பாசம் என்னை "தெளியவைத்தது" அமேரிக்கா சென்று திரும்பும் போது எனக்கு "கைக்கடிகாரமும்" சமீபத்தில் நடைபெற்ற 2014 - சென்னை புத்தக கண்காட்சியில் இரண்டு புத்தகங்களை வாங்கி குடுத்தார் இந்த பாசத்தை என்னால் எழுத்தால் விவரிக்க முடியவில்லை!

--------------

ட்விட்டர்ல @RJcrazyGopal ல பார்த்தாவே பீதியாகிற ஒரே ஆள் நான் மட்டும்தான்னு நினைக்கிறேன்! எப்ப எந்த வாய்ஸ்ல கால் பண்ணுவான்னு எனக்கும் தெரியாது, அவனுக்கும் தெரியாது அவ்வ்வ்-)))) எனக்கு தெரிந்தே ட்விட்டரில் இருப்பவர்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான், நல்ல உதவும் குணம் உள்ளவன்! நிச்சயம் சினிமாவில் பெரிய ஆளா வருவான்.

ஒரு நாள் மாலை டிஎல்'க்கு வந்து பார்த்தால்  எல்லாரும் கவிதை கீச்சு மட்டும் தான் கீச்சிக் கொண்டிருந்தார்கள், ஒரு மென்ஷன் ட்விட் கூட இல்லை எனக்கு செம ஆச்சரியம், ஒரு மணி நேரம் அப்படியே இருந்தது இப்பொழுது அந்த TL போல நடக்குமா என்ன?

சைபர் க்ரைம் பிரச்சினைக்கு பிறகு ட்விட்டர் பழைய ட்விட்டர் இல்லை ஆங்காங்கே பூட்டுகள், பழைய கீச்சுகளின் தரமும் இல்லை, நிறைய புதிய கீச்சர்களின் வருகை வேற?! சொல்லப்போனால் முன்பு போல் ட்விட்டர் இப்பொழுது இல்லை, ட்வீட்டரை பற்றியும் அதில் நடந்த பிரச்சினைகளை பற்றியும் நிறைய எழுதினேன் அது தேவை இல்லை என்று தோணியது அதனால் குறைத்துக்கொண்டேன்

இப்படியும் யோசிக்கலாமா? ஏன் யோசிக்க கூடாது, அட யோசித்துதான் பாரேன் என A to Z அணைத்து விசயங்களிலும் என்னை மேம்படுத்திய ட்விட்டருக்கு நன்றி !!!

டிஸ்கி

  • 2006 -ம் வருடம் கல்லூரியில் படிக்கும் போதே ப்ளாக் நடத்தி வந்தேன் ஆனால் அப்பொழுது எல்லாம் தமிழ் ப்ளாக்குகள் அறிமுகபடவில்லை, அனுபவமும் குறைவாக இருந்தது.
  • இந்த பதிவு எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது, 20 பக்கங்கள் எழுதியிருந்தேன், ட்விட்டர் முகம்  நிறைய மாறிவிட்டதால் 18 பக்கங்களை நீக்கிவிட்டேன், அதுவும் நல்லதுதான்.
  • இப்பொழுதும் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணமில்லை, ஆனால் இப்பொழுதுதான் கொஞ்சம் எழுத ஆரம்பிக்கிறேன் அதற்கு இது கொஞ்சம் உதவும் என்ற நம்பிக்கையில்.


- ஹேரி கெளதம் 

6 comments:

  1. நிறைய பேர் ட்விட்டரில் அவர்கள் அனுபவத்ததையும் சக ட்வீட்டர்கள் பற்றிய அவர்கள் கணிப்பையும் கருத்தையும் பகிர்ந்துள்ளனர். அதில் இதுவரை நான் படித்ததில் மிகவும் அருமையானதும் நேர்மையானதுமான பதிவு உங்களோடது என்று கண்டிப்பாக சொல்ல முடியும்.

    ட்விட்டரிலும் வெளி உலகைப் போல நல்லவர்களும் உண்டு அல்லாதவர்களும் உண்டு. நல்லவைகளும் உண்டு அல்லாதவைகளும் உண்டு. நீங்கள் அன்னப் பறவை போல நல்லதை மட்டும் எடுத்து எழுதியுள்ளீர்கள், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது :-)

    எப்பவுமே ட்விட்டர் ஹென்டிலின் முழு உருவத்தை நேரில் சந்திக்கும்போது ஒரு excitement வரும், பின் அவர்களின் நேரில் பார்க்கும் தன்மைக்கும் ட்விட்டர் முகத்துக்கும் உள்ள வேறுபாடும் தெரியவரும்.

    அந்த வகையில் ட்விட்டர் மூலம் எனக்கும் பல நண்பர்கள் உங்களைப் போல கிடைக்கப் பெற்றிருக்கிறேன் :-)

    வாழ்த்துகள் :-)

    amas32

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழரே ...அருமையான பதிவு .. மிகவும் நெகிழ வைக்கிறது உங்களின் வார்த்தைகள் .. என் மன நிலையில் உள்ளதை அதிகளவு நீங்களே சொல்லி விட்டீர்கள் ..

    உண்மையான, நிதர்சனமான வார்த்தைகளை உணர முடிகிறது ..
    உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி ..

    என் வாழ்க்கையை (நல்லவிதமாக ) புரட்டிப் போட்டதும் இதே ட்விட்டர்தான் .. குறிப்பாக @riyazdentist அவர்கள் ..
    இன்றளவும் என் முகம் பார்க்காத எத்தனையோ நல்ல உள்ளங்கள் இன்றளவும் உள்ளனர் ... நேரம் கிடைக்கும் போது அதையும் பகிர்கிறேன் ..

    உங்களின் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி ..வாழ்க்கையில் மன நிம்மதியுடனும் , சந்தோஷத்துடனும் ,வெற்றிகளுடனும் நீங்கள் சிறக்க இறைவன் அருளட்டும் ! வாழ்க வளமுடன் !!!

    ReplyDelete
  3. மிக்க நன்றி தோழரே ...அருமையான பதிவு .. மிகவும் நெகிழ வைக்கிறது உங்களின் வார்த்தைகள் .. என் மன நிலையில் உள்ளதை அதிகளவு நீங்களே சொல்லி விட்டீர்கள் ..

    உண்மையான, நிதர்சனமான வார்த்தைகளை உணர முடிகிறது ..
    உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி ..

    என் வாழ்க்கையை (நல்லவிதமாக ) புரட்டிப் போட்டதும் இதே ட்விட்டர்தான் .. குறிப்பாக @riyazdentist அவர்கள் ..
    இன்றளவும் என் முகம் பார்க்காத எத்தனையோ நல்ல உள்ளங்கள் இன்றளவும் உள்ளனர் ... நேரம் கிடைக்கும் போது அதையும் பகிர்கிறேன் ..

    உங்களின் வாழ்த்துக்களுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி ..வாழ்க்கையில் மன நிம்மதியுடனும் , சந்தோஷத்துடனும் ,வெற்றிகளுடனும் நீங்கள் சிறக்க இறைவன் அருளட்டும் ! வாழ்க வளமுடன் !!!

    ReplyDelete
  4. நல்ல பதிவு.. அக்கவுன்ட் ஆரம்பித்து வருடங்கள் ஆனாலும் ட்விட்டர் எனக்கு புதியது.. இப்பொழுது தான் கீச்சுக் கொண்டிருக்கிறேன்.
    எனக்கு ட்விட்டர்ல திடீரென ஈடுபாடு வரக் காரணம் நெல்லை அண்ணாச்சி அவர்கள் FB யில் ஷேர் செய்த கீச்சுக்கள் தான். அமாஸ் அம்மாவின் புதிய டவிட்டர்களுக்கான ஒரு பதிவையும் படித்தேன்..
    உங்களது இந்த பதிவும் புதிய பதிவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

    ReplyDelete