மாச கடைசி – ஸ்பெஷல் டிப்ஸ்


குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தில இருந்தே, இந்த மாச கடைசின்னு ஒன்னு 

சம்பிரதாயமா வெச்சிருக்காங்க, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரூல்ஸ்படி மாதம் 20லிருந்து 30 

வரை தான் மாச கடைசி ஆனா இப்ப அப்படியில்ல 5ந் தேதியிலிருந்தே ஆரம்பிச்சுருது

உலககோப்பை கிரிக்கெட்டுல ஜிம்பாபே கப்பு வாங்குன்னு நம்பறதும், நம்மகிட்ட சேமிப்பு 

பழக்கம் இருக்கறதுன்னு நம்புறதும் ஒன்னுதான்


சேமிக்கறதுக்கு எவ்வளவு டிப்ஸ் குடுத்தாலும் எப்படியும் பாலே பண்ண போறதில்ல

இருந்தாலும் விவேகானந்தர் கனவு கண்ட இளைஞர்கள் மாத இறுதியில் பசியில் வாடும் 

பொழுது நம்ம மனசு கேட்கல பாஸ் –(


அவுங்களுக்காகவே இதே ஸ்பெஷல் டிப்ஸ்!






  • எந்த தேதில சம்பளம் வந்தாலும் நீங்க செய்ய வேண்டியது வாடகையை உடனே குடுத்துடுங்க, எடுத்து வைக்காதீங்க

  • வெளியில போய் சாப்பிடாரத முடிஞ்ச வர குறைக்க ட்ரை பண்ணுங்க, செலவு அதிகம் மட்டுமல்ல, உடல்நலத்துக்கும் பிரச்சினை.


  • சமைக்க வாய்ப்பு இருக்கறவிங்க எலக்டரிக்கல் ஸ்டவ் வாங்கினாலே இலவசமா பாத்திரங்கள் வரும், அன்னிக்கே அரிசி, புளி, மிளாகாய், சாம்பார்-ரசப் பொடி எல்லாம் வாங்கி வெச்சுக்குங்க புரட்சி போராட்டா காலங்கள்ல உதவும்.

  • முடிஞ்ச வர ஒரே டீக்கடையில டீயோ காப்பியே குடிச்சு பழகுங்க, அப்பதான் அக்கௌண்ட் வைக்க முடியும், 20ந் தேதியிலிருந்து 30ந்தேதி போர்க் காலங்கள அது தான் சோறு போடும்

  • சம்பளம் வரும் தேதிய பார்த்து ஹேர் கட்டிங் சேவிங் எல்லாம் பண்ண பழகுங்கமொபைல் பூஸ்டரும் அப்படித்தான்.

  • ஆபிஸ்க்கு வண்டில போறவிங்க, பஸ்ல போறவிங்க பெட்ரோலுக்கு, டிக்கட்டுக்கு தேவையான பணத்த உங்க கேர்ள் ப்ரெண்டுகிட்ட குடுத்து வெச்சுருங்க, திரும்ப டபுள்ள கூட வாங்கிக்கலாம்.

  • முடிஞ்ச வர சரக்க ரூம்முக்கு வாங்கிட்டு வந்து அடிங்க பாட்டில்லாவது கிடைக்கும்.

  • எப்ப ரும்முக்கு வந்தாலும் உங்க பர்ஸ்ல இருக்க சில்லறை காச ஒரு டப்பாவுல போட்டு வெச்சுக்குங்க, மாத இறுதியில் அதன் சத்தமே தனி!

  • தவறாமல் வார இதழ்களும், தினசரி நாளிதழும் வாங்கி படிங்க அறிவும் வளரும்வெயிட்டும் கூடும்.

  • தயவு செஞ்சு விஜய் சேதுபதி, தனுஷ் இந்த மாதிரி முக்கியமான ஹீரோக்கு எல்லாம் ரசிகரா இருக்காதீங்க படம் பார்த்து ஓயாது! செலவு பண்ணியும் மாளாது, இருக்கவே இருக்காங்க சிம்பு, அப்பாஸ், சிபிராஜ் எல்லாம் 3 வருஷத்துக்கு ஒருமுறை தான் படம் வரும் அதனால படம் பாரக்கனும்ன்னு கவலையே இல்லாம இருக்கலாம்.


உங்க சம்பளம் ஆறாயிரமோ இல்ல அறுபதாயிரமோ இதுல ஒன்ன பாலே பண்ணுனா கூட மாச கடைசில பீர்'ரே அடிக்கலாம் பாஸ்  ஈஈஈஈஈஈஈஈ- :-)))))))))))))))

No comments:

Post a Comment