தீபிகா





26 வருடங்களுக்கு முன்பு
பெயர் தெரியாத நோயாம்

பெயரே தெரியவில்லை எங்கே குணமாக்குவது
கடைசியில் எய்ட்ஸ் என்று பெயரிட்டார்கள் 

2000 வருடங்களுக்கு பின் வரும் அமாவாசையை கணிக்கிறார்கள்
நிலவுக்கு செல்கிறார்கள்
ஆனால்
இன்று அபரிதமான விஞ்ஞான வளர்ச்சியில்
இந்த வியாதியிடம் மண்டியிட்டு கிடக்கிறது மருத்துவம்

விளைவு

பூமியில் பிறந்த தேவதையை விண்ணுலகமே எடுத்துக் கொண்டது

26 வருடங்களுக்கு முன்பு தகப்பன் செய்த தவறு
பாதிக்கப்பட்டது தாயும், மகளும்

உடன் பிறவா சகோதரி!

உடன் பிறந்திருந்தால் அவளுக்கு முன் நானும்
இந்த பதிவை அவளும் எழுதிக் கொண்டிருந்திருப்பாள்

மற்ற சகோதரிகளை விட உடன்பிறவா சகோதரிகளுக்கு 
மட்டும் 100 சதவீதம் அன்பு அதிகமாக இருப்பது அவர்களின்
சிறப்பு ஆனால் தொலைதொடர்பு?

தீபாவளி முடிந்த அடுத்த நாள் அவளைப் பற்றி
தெரிந்த மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்

மறுநாளே 

அவள் இல்லாத பூமியை நினைத்து பார்க்க முடியவில்லை

முதலில் தந்தை,
இறந்த பிறகும் அவமானப்பட வேண்டுமா
என்று ஊரார்க்கு விஷயம் தெரியாமல் எடுத்து
புதைத்தார்கள்

தாய் இறந்த பிறகு
புதைத்த பிறகு தெரியப்படுத்தினார்கள்

மகள்
தெரியமலே போய்விட்டாள்

பிறந்ததிலிருந்து தாய்பாலுடன், மாத்திரையும்
சேர்த்தேதான் ஊற்றினார்கள்
கடைசியில் முற்றிய தீராத வியாதியின்
தோழனாய் புற்றுநோயும் வர
துடித்துவிட்டாள்

இதில் ஏழ்மை வேற

சென்னை அரசு மருத்துவமனையிலும் சரி
அடையாறிலும் சரி
எய்ட்ஸா? புற்றுநோயா? 
எதற்கு முதலில் வைத்தியம் பார்ப்பது
என்ற குழப்பத்திலே
கையை விரித்துவிட்டார்கள் மருத்துவர்கள்

புதிய நோய் எதிர்ப்பு அனுக்கள் உருவாகவில்லையாம்
நுரையிரல் வீங்கி போய்விட்டதாம்
கடைசி நிமிடத்திற்கு முன்பு வரை
நடந்து கொண்டே இருந்தாளாம்
உயிர் பிரியும் போது கூட நாற்காலியில் தான் 
உட்கார்ந்திருந்தாளம்

அலைபேசியில் கேட்கும் போதே 
இதயங்கள் கதறிவிட்டது
நேரில் பார்த்தவர்கள் கதி அய்யகோ!

டேய் தகப்பா
உன் அரிப்புக்கும், சந்தோஷத்திற்கும்
நீ செய்த தவறு
உன் பரம்பரையே பழி வாங்கிவிட்டதடா?
உன் மகள் என்னடா பாவம் செய்தாள்
உனக்கு மகளாய் பிறந்ததை தவிர

கல்லுரியிலும் மருத்துவமனையிலும்
இந்த பொண்ணுக்கு எய்ட்ஸ என்று
ஒவ்வொருத்தரும் அவளை பார்க்கும் போது
அவர்களின் முகம் பார்க்க முடியாமல்
கூனி குறுகி
தந்தை என்று உண்னையும் விட்டு கொடுக்க
முடியாமல்
தானும் குற்றம் செய்யவில்லை என்று
நிருபிக்க முடியாமல்
அவள் பட்ட கஷ்டங்கள்
கொஞ்சம் நஞ்சம் அல்ல”

“ஒருமுறை 
உன் கல்யாணத்துக்கு எல்லா வேலையும்
நான்தான் இழுத்துப் போட்டு செய்வேன் என்று
சொன்ன போது  எனக்கெல்லாம்
எங்கண்ணா கல்யாணம் ஆகப்போவுது என்று
அவள் சொல்லில் தெரிந்த ஏக்கம் –(((

கடைசி வரை அவளுக்கு எதுவுமே செய்ய இயலாத அண்ணனாய் இருந்தது 
ஆயிரம் தற்கொலைக்கு சமம்!

வயது வந்த பருவம் முதல்
தன் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி
கஷ்டங்களை யாரிடமும் வெளிக்காட்டாமல்
கடைசிவரை எந்தவித சந்தோஷங்களையும்
அனுபவிக்காமலே சென்றுவிட்டாள்
சொர்க்கத்தில் நிச்சயம் நீ சந்தோஷமாக இருப்பாய்!

ஏய் கடவுளே!
என் தங்கையை நன்றாக பார்த்துக்கொள்,
முடியவில்லை என்றால் சீக்கிரமே
எனக்கு மகளாக அனுப்பிவிடு!
நான் பார்த்துக் கொள்கிறேன்
போய் வாடா என் தங்கமே
உன் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும்

உமக்கு மிஞ்சியது உண்ணுடைய அன்பும்  பாசமும்
தான்
அது என்னிடமே இருக்கட்டும்
சீக்கிரம் வா 
காத்துக் கொண்டிருக்கிறேன்

பாசமுள்ள அண்ணன் :-((((((((((((((((((((((

No comments:

Post a Comment